சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், அத்தகைய பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை என டிஜிபி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை என்று அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
மேலும், 132 பக்க அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறியிருந்த அவர், இன்று விசாரணை அறிக்கையின் நகலை ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வழங்கினார்.







