முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா மறுபரிசோதனை தேவையில்லை: சுகாதாரத்துறை

கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு RT – PCR பரிசோதனை தேவையில்லை என மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒரு சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் முன் பரிசோதனை மேற்கொள்வதாக கிடைத்த தகவலின் பேரில் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன், RT – PCR பரிசோதனை தேவையில்லை என்றும், அதிதீவிர நோயாளிகளுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மிதமான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தவேண்டும்.

அதேநேரம் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

யாருக்கேனும் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:

Related posts

உடல்களை மாற்றி வழங்கிய மருத்துவமனை ஊழியர்கள்!

எல்.ரேணுகாதேவி

கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!

Ezhilarasan

கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்: முதல்வர் பேச்சு