டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் ஆகிய நான்கு பகுதிகளில் நடக்க இருக்கிறது.
முதல் சுற்று போட்டியில், பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் கலந்துகொள்கின்றன. முதல் சுற்று போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 பிரிவில், நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரே லியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் இடம்பெறும்.
குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ் தான் அணிகள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.








