ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸுக்கு தேவையில்லை: ராகுல் ஆவேசம்

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி…

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“பெரும்பாலான மக்கள் அச்சம் இல்லாமல் இருக்கின்றனர். அத்தகையோர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. அச்சமில்லாதவர்களை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வரவேண்டும். பாஜகவுக்காக அச்சப்படும் காங்கிரஸ்கார ர்கள், வெளியேறும் வழியைப் பார்க்கலாம். ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அச்சம் இல்லாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.