“வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி” – ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில்,  வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக…

நாடாளுமன்ற தேர்தலில்,  வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்நிலையில், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில்  செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

“6 மாதமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன்”

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.