அடுத்த திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினி!

ஐதராபாத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். …

ஐதராபாத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் லால் சலாம்.  இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார்.  லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்து உள்ளனர்.  மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.

இத் திரைப்படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க,  கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன்,  செந்தில்,  ஜீவிதா,  கே.எஸ்.ரவிக்குமார்,  தம்பி ராமையா,  நிரோஷா,  விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.  லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.   இதனிடையே இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’  திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

மேலும், இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.   அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் வேட்டையன் படப்பிடிப்பு முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை வந்தார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

“லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது என்று கேள்விபட்டேன்.  படம் வெற்றி அடைந்து உள்ளது.  படத்தை தயாரித்த லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.  வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டது.  20 சதவீதம் முடிந்து தீபாவளிக்கு வெளியாகும்.  அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன்.  விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.