முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் சட்டம்

“சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கட்டில் இல்லாமல் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், திமுகவைச் சேர்ந்த நரேஷ் கள்ள ஓட்டுப் போட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். பின்பு நரேஷை அடித்து அரைநிர்வாணமாக அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து காயமடைந்த நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கத்தில் தனது வீட்டிலிருந்த ஜெயக்குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தற்போது புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து செய்தியாளார்களை சந்தித்த அவர், “ஜெயக்குமார் மீது வழக்குப் போட்டால் அதிமுகவை அழித்துவிட முடியுமா? எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கைது செய்யப்பட்ட என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் 3 மணி நேரம் சென்னையை காவல்துறையினர் சுற்றிக் காண்பித்தனர். ஹிட்லர் முசோலினியின் ஒட்டுமொத்த சர்வாதிகாரி பிரதிபலிப்பாக ஸ்டாலின் இருக்கிறார். சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது, கட்டில் இல்லை கட்டாந்தரையில் படுத்து இருந்தேன்” எனக் கூறினார். மேலும் தீவிரவாதிகள் இருந்த சிறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் ஸ்டாலின் மட்டுமல்ல அடுத்த பத்து தலைமையினர் வந்தாலும் அதிமுக-வை அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Web Editor

நான் அவன் இல்லை பாணியில் மாணவிகளை ஏமாற்றிய இளைஞர் – போக்சோவில் கைது

EZHILARASAN D

சர்வதேச விமானங்கள் ரத்து!

EZHILARASAN D