“எந்த அவமரியாதையையும் நான் செய்யவில்லை” – ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்

உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து, எந்த அவமரியாதையான காரியங்களையும் தான் செய்யவில்லை என ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் விளக்கம் மளித்துள்ளார்.  இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி…

உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து, எந்த அவமரியாதையான காரியங்களையும் தான் செய்யவில்லை என ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் விளக்கம் மளித்துள்ளார். 

இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடந்த மாதம் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  இதில்,  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.  இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது.  பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஆகியோரின் அதிரடியால் 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதையடுத்து உலகக் கோப்பை டிராபியுடன் ஆஸ்திரேலியா வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனித்தனியாக டிராபியுடன் போஸ் கொடுத்தனர்.  ஆனால், மிட்செல் மார்ஷ் மட்டும் ஒருபடி மேல் சென்று டிராபி மீது கால் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மிட்செல் மார்ஷ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவரது செயல் இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“அந்த புகைப்படத்தில் எந்த அவமரியாதையான காரியங்களையும் நான் செய்யவில்லை.  நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. சமூகவலைதளங்களில் அந்தப்படம் வைரலானதாக பலரும் சொன்னார்கள், ஆனால் நான் பெரிதாக எதையும் பார்க்கவில்லை. அந்த புகைப்படத்தில் ஒன்றுமே இல்லை” இவ்வாறு மிட்செல் மார்ஷ் சர்சையான புகைப்படம் பற்றிய தன் கருத்தை தெரிவித்தார்.

உலகில் உள்ள அனைத்து அணிகளும் போராடும் ஒரு டிராபிக்கு, மிட்செல் மார்ஷ் செய்த செயல் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.