“25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்கும் புரட்சியை செய்துள்ளேன்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

“நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன். அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பீகார் மாநிலம் கயாவில் இன்று…

“நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன். அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் கயாவில் இன்று (ஏப். 16) பாஜக சார்பில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

“அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்க முடியாது. மக்களின் ஆசியே எனக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரின் கனவு. ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். ரூ.5 லட்சம், பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும் இவை அனைத்தும் மோடியின் உத்தரவாதங்கள்.

பீகார் மாநிலம் காயாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் ஒரு பகுதியினர்

பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் நேரத்தை வீணடித்தது. பீகாரை ஆண்ட ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சியில், ஊழல் செய்வதே ஒரு தொழில்போல எங்கும் பரவியிருந்தது. இந்தியா கூட்டணியினர், பீகாரில் நிதிஷ் குமார் செய்த சாதனைகளை தனது சாதனைகளாக கூறுகின்றனர். மேலும் மத்திய அரசு செய்த பணிகளுக்கு இந்தியா கூட்டணியினர் பெருமை தேடிக்கொள்ள முயல்கிறார்கள் என்பது முழு பீகார் மக்களுக்கும் தெரியும்.

பீகார் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

ராஷ்ட்ரிய ஜனதா அரசு பீகாருக்குக் கொடுத்தது இரண்டு தான் ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. நான் நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன். சமூக நீதி என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அரசியல் செய்தன. இந்த தேர்தல், பரந்த பாரதம், பரந்த பீகாருக்காக நடத்தப்படுகிறது”

என பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.