கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஈரோடு பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு; உயர்நீதிமன்றத்தில் மனு
கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவரின் அன்பை பெற்ற கலைஞரின் அன்பை பெற்ற, ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்கின்றார். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாய்ப்பு கேட்டு வந்து இருக்கின்றேன். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஜெயிக்க வைக்க வேண்டும் என
தெரிவித்தார்.அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்றார். சட்டமன்றம் நிறைவேற்றிய 19 தீர்மானங்களை செயல்படுத்த விடாமல் ஆளுநர் இருக்கின்றார். அவங்க பிரச்சினைக்கு மோடிகிட்ட போனங்க, மக்கள் பிரச்சினைக்கு போயிருக்காங்களா? என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி போனவுடன் இருவரும் சண்டை போடுகின்றனர். ஒருநாள் தவறுதலாக என் வண்டியில் ஏற போயிட்டாங்க. அப்பவே கமலாலயத்துக்கு மட்டும் போயிடாதீங்க என சொன்னேன். இப்ப இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்துக்கு போயிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.
எம் .ஜி.ஆர் கொண்டு வந்த சட்டத்தை விட்டு விட்டு குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்து இருக்கின்றார் எடப்பாடி. சசிகலாவையும் ஏமாற்றி, ஒ.பி.எஸையும் ஏமாற்றி, மக்களையும் ஏமாற்றி இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. மோடிக்கும், அமித்ஷாவிற்கும் மட்டுமே உண்மையாக இருக்கின்றீர்கள் எனக்குற்றம் சாட்டினார்.இந்த ஆட்சி வந்த பின்பு அறிவித்த கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை பணி
முடிவடையும் நிலையில் இருக்கிறது. மதுரையில் கலைஞர் நூலகம் 6 மாதம் முன்பாகவே முடிந்துவிட்டது. ஜூன் 3 ம் தேதி திறக்க இருக்கின்றனர். பிரதமர் மோடி 2019ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது, இப்பவரை கட்டவில்லை. இதற்கு 300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரோட்டிற்கு ரூ.1000 கோடி அளவில் பல்வேறு திட்டங்கள் வழங்கபட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் இருக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளையாக, கலைஞரின் பேரனாக கேட்கின்றேன், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களியுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.