சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 150 போட்டிகளில் விளையாடி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிக டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் அயர்லாந்து மகளிர் அணியுடன் குரூப் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார். இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையையும் இதன் மூலம் ஹர்மன்ப்ரீத் முறியடித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தா 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்மன்ப்ரீத், இதனை மிக பெரிதாக உணர்கிறேன். எனது அணயில் இருந்து உணர்ச்சிகரமான வாழ்த்துக்களை பெற்றேன். பிசிசிஐ, ஐசிசக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாட உள்ளோம் என தெரிவித்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிவர்களில் 150 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் ஹர்மன்ப்ரீத் கௌரும், 148 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் ரோகித் சர்மாவும், 143 போட்டிகளில் விளையாடி 3வது இடத்தில் சுசி பட்டேலும் உள்ளனர்.







