முக்கியச் செய்திகள் தமிழகம்

என் மீதான வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்-அமைச்சர் செந்தில் பாலாஜி

தன் மீதுள்ள வழக்கை சந்திக்கத் தைரியமில்லாமல் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தடை வாங்கியது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மின்துறை ஆய்வுக்கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு நீங்கள் தான் காரணமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், என் மீதும் தான் வழக்கு தொடர்ந்தார்கள், ஆனால்  நான் யாரைச் சொல்வது எனக் கேள்வி எழுப்பினார். என் மீது தவறிருந்தால் நான் தான் நிரூபிக்க வேண்டும் .கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும் 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் ரெய்டு சரியா? இல்லையா? எனப் புரியும். அவர்களுடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சொத்துக்கள் அனைத்து  எங்கிருந்து வந்தது  எனவும், விவசாயம் செய்து வந்ததா? என கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எந்த தவறும்  இல்லையெனில்  தைரியமாக எதிர்கொள்ளலாம். ஆனால்  தேவையற்ற கருத்துக்களை ஏன் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். ரெய்டு தொடர்பாக  எடப்பாடி பழனிசாமியின் மீதுள்ள வழக்கைச் சந்திக்காமல் ஏன் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கினார்? என கேள்வி எழுப்பினார்.என்மீதுள்ள வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். என் மீதான வழக்கைச் சரியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது விசாரித்தது சரியில்லை என்றும், அதை பற்றிச் சொன்னால் சில கசப்புகள் வெளி வரும் எனவும், என் மீதான வழக்கை எதிர்கொள்ள நான் தயார். அவர்களும் எதிர்கொள்ளட்டும், யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைப்பது உறுதி எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்த ஈஸ்வதினி நாட்டின் பிரதமர்!

Arun

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik

’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..?’ மேரி கோம் கண்ணீர்

Gayathri Venkatesan