முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தின் லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு தொழிலாளர்களை பணிக்காக ஏற்றிச் சென்ற லிஃப்ட்  ஏழாவது மாடியில் இருந்து திடீரென கீழே அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் லிஃப்டில் சென்ற 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மண்டலம் 1இன் காவல் துணை ஆணையர் லவினா சின்ஹா தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து அகமதாபாத் மேயர் கே.ஜே.பர்மார் கூறுகையில், தனியார் கட்டுமானப் பணியின்போது லிஃப்ட் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் காலை 7.30 மணிக்கு ஏற்பட்டுள்ள நிலையில், காவல் துறையினருக்கு 11 மணிக்கு மேல்தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டடம் மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மனைவி

EZHILARASAN D

நூதன முறையில் தங்கம் கடத்தல்: சென்னை பயணி கைது

Halley Karthik

கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேரம் விசாரணை

Dinesh A