தானும் ஒரு புகைப்படக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் காலத்தால் கரையாத காட்சிகள் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள லலித்கலா அகாடமியில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கியது.ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புகைப்பட கலைஞர்கள் சங்கம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சங்கத்தில் பல்வேறு பதித்திரிக்கைகளை சேர்ந்த, புகைப்பட கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கை பேரிடர்கள், முக்கிய சம்பவங்கள் நடைபெறும் போது மிகத் துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த புகைப்படங்களை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் கண்காட்சிகளில் வைத்திருந்தனர். மேலும் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருந்த முக்கியமான செய்திகளின் புகைப்பட தொகுப்பும் இக்கண்காட்சியில் இடம்பெறும் வகையில் வைக்கபப்ட்டிருந்தது.
இந்த கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை புரிந்து புகைப்படங்களை கண்டு ரசித்து வந்தனர். இந்த நிலையில் புகைப்பட கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி, தி டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பு ஆசிரியர் அருண் ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிலருக்கு உட்கார்ந்தால் பேச்சு வரும், சிலருக்கு நின்றால் பேச்சு வரும். அதனால் நான் நின்று கொண்டே பேசுகிறேன் என நகைச்சுவையாக தந்து பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், அழையா விருந்தாளியாக வந்துள்ளேன். ஒரு மணி நேரம் புகைப்படங்களை பார்த்தேன்.புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக உள்ளன. நானும் புகைப்பட கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் காலம் என்னை இங்கு அழைத்து வந்து விட்டது.
விழாவிற்கு வருகை தந்தால் ஏதாவது சொல்ல மாட்டானா? கண்டெண்ட் கிடைக்காதா? என செய்தியாளர்கள் மைக்குடன் ஆவலாக வருவார்கள் பேசாமல் போயிருவோம் என்று தான் வந்தேன். ஆனால் புகைப்பட கலைஞர்களிடமிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா