“1 தொகுதி கேட்டுள்ளோம்” – திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா பேட்டி!

வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று…

வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன.  தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட்,  விசிக,  மதிமுக,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்நிலையில்  மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், மமக தலைவரும்,  சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மமக செயல்படும் எனவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் மமகவுக்கு 1 தொகுதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.