19 வது ஐபில் தொடரானது வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் 10 அணிகள் போட்டியிடுகின்றன. தொடரின் முதல் நடப்பு சாம்பியன் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில் கொல்கத்தா அணியில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ஹர்ஷித் ராணாவிற்குப பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி, சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நவதீப் சைனி சைனி ரூ.75 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக, கொல்கத்தா அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டாவது வீரர் சைனி ஆவார். முன்னதாக ஆகாஷ் தீப்பிற்கு மாற்று வீரராக சௌரப் துபேவை கொல்கத்தா ஒப்பந்தம் செய்தது.








