நடிகர் கருணாஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ’கர’ படக்குழு….!

நடிகர் கருணாஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை கர படக்குழு வெளியிட்டுள்ளது.

‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 30ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்திலிருந்து இதுவரை வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருணாஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி நடிகர் கருணாஸ் “காசி மாயன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக மமிதா பைஜு, கேஎஸ் ரவிகுமார் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.