புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’புதுச்சேரியில் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய் கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோப்புகள் தயார் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய அவர், ஏனாம் பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் சூதாட்ட கிளப்புகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கும் விவகாரத்தில் தீபாவளிக்கு பின்பு மின்துறை ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும், புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்தப்பட உள்ளதால் தனி கல்வி வாரியம் அமைக்க வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.