பழனி முருகன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
செய்தனர்.
கேரளாவில் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரள பக்தர்கள் குவிந்தனர். நேற்று ஓணம் பண்டிகை என்பதாலும் மற்றும் தொடர்ந்து சனி ,ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளி கிழமையான இன்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இன்றுஅதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் ரோப்கார் ,மற்றும் மின் இழுவை ரயில்களில் செல்ல சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கு சென்று சாமி தரிசனத்திற்காக 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.







