ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த , பொன்னியின் செல்வன் திரைப்படம், இம்மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
1950- 1955 காலகட்டங்களில் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினம் தான் பொன்னியின் செல்வன். இந்த புதினம் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
அப்படி வெளியிடப்பட்ட இந்த புதினம் வாசகர்களிடம் இருந்து கிடைத்த பெறும் வரவேற்பால் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினம் கல்கி இதழில் தொடர் கதையாக வெளியிடப்பட்டது.
சோழப் பேரரசையும் அதன் வரலாற்றை மையமாக வைத்துக்கெண்டு தன் கற்பனை கதாபாத்திரங்களையும் அக்கதாபாத்திரங்களுக்குப் பின் கதையும் என இவர் எழுதிய கதை வடிவம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இதில் பல திரைத்துறையினரும் அடங்குவர்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க 1958 ஆம் ஆண்டு எம்ஜிஆர் பொன்னியின் செல்வான் நாவலின் உரிமையை ₹10,000க்கு வாங்கினார்.
பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க எம்ஜிஆர் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். பாரதிராஜா, மகேந்திரன் எம்ஜிஆர், கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக அறிவித்தவர் எம்ஜி ராமச்சந்திரன். ஆனால் பல காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.
பின் 1980களில் எம்ஜிஆரின் ஆசையை நிறைவேற்ற நினைத்த கமல்ஹாசன் நாவலின் உரிமையை வாங்கி மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றினார். அருள்மொழி வர்மனாக கமல்ஹாசன், வந்தியத்தேவனா ரஜினிகாந்த், ஆதித்திய கரிகாலனாக விஜயகாந்த் நடிக்கவுள்ளதாக என்று அந்த நேரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சியும் பாதியிலேயே முடிந்தது.
பின் 2000ஆம் ஆண்டு, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பொன்னியின் செல்வான் நாவலைத் தழுவி ஒரு கதையை எழுதி வந்தனர். ஆனால் அதுவும் கைவிடப்பட்டது.
பின் 2010 மற்றும் 2011 ஆகிய இடைப்பட்ட காலங்களில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து மணிரத்னம் பொன்னியின் செல்வான் படத்தின் பணிகளைத் தொடங்கினார்.
அப்படத்தில், மகேஷ்பாபு, தளபதி விஜய் மற்றும் கார்த்தி, ஆர்யா, அமலா பால் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் VFX மற்றும் கிராபிக்ஸ் இப்போது இருப்பது போல் மேம்பட்டதாக இல்லையென்பதால் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் தொடர்ந்து முயன்ற மணிரத்னம் 2019 இல் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்துடன் இணைந்து தற்போது பட்டதை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்நிலையில் கடந்தவாரம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வறுக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவது மணிரத்னத்திற்கு மட்டும் கனவு இல்லை. ஒட்டு மெத்தத் தமிழ் திரைத்துறையிற்கே 64 ஆண்டுகாலமாகக் கனவாகவே இருந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.








