டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று டெல்லி…

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று டெல்லி சென்றனர்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுப்பது மற்றும் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய அரசுடன் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் இன்று டெல்லி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.