பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!

செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை  மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள்,  நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…

செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை  மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள்,  நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே பட்டாசுகளே வெடிக்காமல் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த  ஜீவா நகரில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.  அங்கு சிறுவர்கள் பெரியவர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர்க்கு  தனியார் தொண்டு நிறுவனம் சார்பில்  புத்தாடைகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் குழு பாட்டு போட்டி நடைபெற்றது. 

 

இதையும் படியுங்கள்:  கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!

அதை தொடர்ந்து மலைவாழ் மக்கள்,  சிறுவர்கள் சினிமா பாடலுக்கு அழகாக நடனமாடினர்.  அதனை அங்குள்ளவர்கள் பார்த்து ரசித்தனர்.  மேலும் அனைத்து சிறுவர்களும் ஒன்றிணைந்து உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.  தீபாவளி பரிசினை வழங்க வருகை தந்த தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்களுக்கு  மலைவாழ் மக்கள் தாமரைப்பூ மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

மலைவாழ் மக்கள் தீபாவளி பண்டிகையை மாசு ஏற்படுத்தாமல் கொண்டாட விரும்பினர்.  அதனால் அவர்கள் பட்டாசு வெடிக்காமல் நடனம் ஆடி, பாட்டு பாடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.