உயர்நீதிமன்ற உத்தரவு; 2 நாளில் வழங்கப்பட்ட சாதி, மதமற்றவர் சான்றிதழ்

சாதி மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபருக்கு 2 நாளில் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெற்றோர் தங்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தை வழியில் சாதி மற்றும்…

சாதி மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபருக்கு 2 நாளில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெற்றோர் தங்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தை வழியில் சாதி மற்றும் மதச் சான்றிதழைப் பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் நம் நாட்டில் உள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை இதற்கான சான்றிதழை வழங்குகிறது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ்  என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

மனுவில் எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்கவுள்ளேன் .எனவே எனது மகனுக்கு சாதி மதம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் வழங்கப்படவில்லை . எனவே , எனது மகனுக்கு சாதி , மதம் அற்றவர் என்ற வகையில் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார் .

இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தாரர் அளித்த கடிதத்தை தாக்கல் செய்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல், மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் சாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் .

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சாதி மதம் இல்லை என்ற சான்றிதழை , வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 2 நாளில் வழங்கப்பட்டது. சாதி மதம் இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் இந்த சான்றிதழ் வரவேற்பை பெற்றுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.