ஜார்கண்ட் மாநிலம் தனியார் துறையில் உள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வருகிறது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்களில் வெளி மாநிலப் பணியாளர்கள் அதிகளவில் பணி புரிவதால் உள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பு நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் துறையில் பெரும்பான்மை அளவு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.
தனியார் துறைகளில் உள் மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு 75 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்த அவர், முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1, 000 நிதி உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றார். 2021ஆம் ஆண்டு ஆசிரியர்கள், காவலர்கள் அதிகளவில் நியமிக்கப்படுவர். 57 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 10 ரூபாய் என்ற வீதத்தில் மானிய விலையில் லுங்கி, புடவைகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 50,000 ரூபாய் வரையிலான வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.