போராட்டத்தில் திடீரென உயிரிழப்புக்கு முயன்ற மூமுக தலைவர் வாண்டையார்!

சீர்காழியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உயிரை மாய்த்துக்முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீதர் வாண்டையார் கள்ளர்…

சீர்காழியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உயிரை மாய்த்துக்முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீதர் வாண்டையார் கள்ளர் ,அகமுடையார், மறவர் ஆகியோரை தேவர் சமூகம் என அறிவித்து, அந்த இடத்தின் மக்கள் தொகை அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி, சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் யுவபிரியா ஆகியோர் மூமுக தலைவர் வாண்டையாரிடம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கோரி வலியுறுத்தி வந்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீதர் வாண்டையார், நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார். இதை தொடர்ந்து மூமுக தலைவர் வாண்டையாரின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் ரத்த அழுத்தம் அதிகரித்ததாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் கோபமடைந்த மூமுக தலைவர் வாண்டையார் திடீரென உயிரிழப்பு க்கு முயன்றார். பின்னர் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply