உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில்  உள்துறை அமைச்சர் உட்பட 16பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே தொடர்ந்து  போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் போர்…

உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில்  உள்துறை அமைச்சர் உட்பட 16பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே தொடர்ந்து  போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனாலும் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்  உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்துறை அமைச்சர் உட்பட அரசு அதிகாரிகள் சென்ற விமானம் விபத்துகுள்ளாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சரான  டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, இணை அமைச்சர் எவாஹின் எனின் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரி யூரி லுபோவிச்  ஆகிய அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். ஹெலிகாப்டர் தலைநகரான  கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது  கட்டுப்பாட்டை இழந்தது. எனவே அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி பள்ளி ஒன்றின் மேற்கூரையின் மீது  மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பற்றி எரியும் காட்சிகளை உக்ரைன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் உள்துறை அமைச்சரான  டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் மூன்று குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.