புதுச்சேரி அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்; மாணவர்கள் பாதிப்பு

புதுச்சேரி அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுச்சேரி லாஸ்பேட் பகுதியில் அமைந்துள்ளது மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி, இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 45 விரிவுரையாளர்கள்…

புதுச்சேரி அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி லாஸ்பேட் பகுதியில் அமைந்துள்ளது மோதிலால் நேரு அரசு தொழில்
நுட்பக் கல்லூரி, இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 45
விரிவுரையாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் கல்லூரியில் பணி புரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழிர்களுக்கு பணி உயர்வு
வழங்கிட வேண்டும், கடந்த 13 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும்
விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள தொழிற்நுட்ப கல்லூரி ஊழியர்களுக்கான பணி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலக வாயலில் அமர்ந்து கடந்த 12ம் தேதி உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து பொங்கல் பண்டிகை காரணமாக தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்த அவர்கள், இன்று மீண்டும் இரண்டாவது நாளாக முதல்வர் அலுவலகம் வாயிலில் அமர்ந்து தங்களது உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி
கோஷங்களை எழுப்பி வருகின்றனர். விரிவுரையாளர்களின் இந்த போராட்டத்தின் காரணமாக கல்லூரியில் வகுப்புகள் ஏதும் நடைபெறாததால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.