நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில்  காலை முதல் மிதமான மழை பெய்து,  நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், நாகூர், செருதூர், பூவைத்தேடி, வடவூர் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு  இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

—-ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.