அதிராம்பட்டினத்தில் கோடை மழை இன்று கொட்டி தீர்த்தது. இதில் காவல் நிலையம், பேருந்து நிலையம் மழை நீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டிவதக்கும் நிலையில், இரு தினங்களாக பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இரவில் இடி மின்னலுடன் சுமார் இரண்டு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அதிராம்பட்டினம் பேருந்து நிலைத்திலும், காவல்நிலையத்திலும் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது. கோடை வெயிலுக்கு இதமாக மழை பெய்ததால், மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—-அனகா காளமேகன்







