தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் பகல் நேரங்களில்…

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து
வந்தது. இந்த சூழலில் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வந்தது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானர். இந்த நிலையில் நேற்று மாலை
வெயிலின் தாக்கம் குறைந்து கரு மேகங்கள் சூழ மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்
மழை பெய்தது.

இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பண்பொழி, வடகரை,
அச்சன்புதூர், காசிதர்மம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை
பெய்தது.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் இந்த கன மழை காரணமாக, பகல் முழுவதும் வீசி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

—ம. ஶ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.