முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்: வேளாண் அமைச்சர்

Gayathri Venkatesan

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Jeba Arul Robinson

“திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jeba Arul Robinson