நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் #MaanaaduTrailer என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
மாநாடு படம் பற்றிய அறிவிப்பு 2018ம் ஆண்டு போஸ்டருடன் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு பல காரணங்களால் படத்தின் வேலைகள் துவங்கப்படாமல் இருந்தது. பிறகு 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் மாநாடு படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடித்துள்ளார். மேலும், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ஷுட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே, அக்டோபர் 2ம் தேதி படத்தின் டிரையிலர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் 27ம் தேதி அறிவித்தார். அதன்படி, இன்று காலை 11.25 மணிக்கு மாநாடு டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் #MaanaaduTrailer என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.







