பந்து வீச்சில் அசத்திய டெல்லி; 129 ரன்களில் சுருண்ட மும்பை அணி

டெல்லிக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை மும்பை அணி நிர்ணயித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் தடைபட்ட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை, டெல்லி அணிகள் இடையேயான போட்டி…

டெல்லிக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை மும்பை அணி நிர்ணயித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் தடைபட்ட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை, டெல்லி அணிகள் இடையேயான போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.

இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோகித் சர்மா 7 ரன்னில்  வெளியேறினார். இவரையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தார். இதனிடையே குயின்டன் டி காக் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த திவாரியை 15 ரன்னிலும், அதிரடி வீரர் பொல்லார்ட்டை 6 ரன்னிலும் ஹர்த்திக் பாண்டியாவை 17 ரன்னிலும் வெளியேற்றி டெல்லி வீரர்கள் அசத்தினர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை சேர்த்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 33 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணியில் அக்ஸர் பட்டேல், அவேஷ் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.