நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்பு துறையினா் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் உதகையிலிருந்து கூடலூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சான்டிநல்லா பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும்
நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும்
இயந்திரங்கள் மூலம் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில்
ஈடுபட்டனர்.
அதேபோல் பலத்த காற்றுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகையில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அமைந்துள்ள அபாயகரமான மரங்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
ரூபி.காமராஜ்







