முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருவதாக கூறினார். மேலும் தடுப்பூசியை பொருத்தவரை ஒன்றரை கோடி தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்தும், 3 கோடி தடுப்பூசி நேரடியாகவும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “அடுத்தவர் புகைபிடிப்பதை உடனடியாக நாமும் பிடிப்பதால் கொரோனா நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கிட்டதட்ட 400 பேர் வரை கொரோனா பரவும் அபாயம் ஏற்படும்”, என மருத்துவர் எழிலன் எச்சரித்ததாகவும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Advertisement:

Related posts

திமுகவில் இருந்து கூட்டணிக்கு தூது வந்தது: கமல்ஹாசன்

Ezhilarasan

பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

Ezhilarasan

கொரோனா தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

Jeba Arul Robinson