முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு சரியானதால் ஸ்டெர்லைட்டில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி: அமைச்சர் தகவல்!

ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதால், விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஆய்வின்போது நெல்லை மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவை குறித்தும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிறகு திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் குழந்தைகளை இங்கு பராமரிக்க, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக இதுபோன்று தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிக்கும் மையம், தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையும் என்று நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இயங்க தொடங்கியுள்ளது. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் ரூர்கேலாவில் இருந்து ஐந்து டிரக்குகளில் தூத்துக்குடிக்கு திரவ ஆக்சிஜன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.
………..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை, கோவை விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்

Halley Karthik

இணையப் பயன்பாடு 1.2 பில்லியனாக அதிகரிக்கும்

Halley Karthik

’எனது அனுபவத்தை பரிசோதிக்கும் விதமாக சர்தார் அமைந்துள்ளது’ – நடிகர் கார்த்தி

EZHILARASAN D