முக்கியச் செய்திகள் கொரோனா

பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி வழிமுறைகள்!

பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்..

 • கொரோனா 2-வது அலையில் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
  இதனிடையே, 45 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,
 • மேலும், 18 வயது முதல் 45 வயது வரை இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்பு கண்டிப்பாக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,
  ரத்த அழுத்தம் இருப்பவர்கள், உடல்நிலை சீரான பிறகு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 • கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் தடுப்பூசி போட கூடாது என்றும் கரு உருவாகி 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • குழந்தை பேறுக்கு பிறகு, தாய்பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் தடுப்பூசி போடலாம். கொரோனா தொற்று ஏற்பட்ட தாய், மாஸ்க் அணிந்து குழந்தைக்கு பாலூட்டலாம் என மருத்துவர்கள்தெரிவிக்கின்றனர்.
 • புதிதாக திருமணம் செய்தவர்கள் மற்றும் குழந்தை பேறுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
 • சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தியவர்கள் மற்றும் கல்லீரல் சிகிச்சை மேற்கொண்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
 • நீரிழிவு நோய் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளலாம்.
 • மாதவிடாய் காலத்திலும் பெண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 • தடுப்பூசி போட்டுக்கொண்ட காலத்தில் பெண்கள் வேறு சிகிச்சை எடுப்பதை தவிர்ப்பது நல்லது என்று குறிப்பிடும் மருத்துவர்கள், கொரோனா தொற்று ஏற்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தவர்கள், ஒரு மாதம் கழித்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
 • தடுப்பூசி போட்டிக்கொண்டாலும், குளிர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும், மாஸ்க் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 • கொரோனா பெருந்தொற்று காலத்தில், கர்ப்பிணிகள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சிகிச்சைக்காகவோ, கண்காணிப்புக்காகவோ அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய பிரதேசத்தில் மறைக்கப்படுகிறதா கொரோனா மரணங்கள்?

EZHILARASAN D

ஆர்யன் கானுக்கு ஆசையாக அம்மா அனுப்பிய டிபன்: திருப்பி அனுப்பிய சிறை அதிகாரிகள்

Halley Karthik

கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி

Halley Karthik