கொரானா இரண்டாவது அலை அதிகரிப்பிற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,“கொரோனா பேரிடரை கட்டிப்படுத்துவதில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் குரலை மட்டுமல்லாது மக்களின் குரலையும் கேட்க தயாராக இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், மத்திய அரசு இந்த நேரத்தில் மவுனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.







