முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளில் துன்பங்கள் அகன்று, தீப ஒளியில் மகிழ்ச்சி பரவட்டும் என்று பொதுமக்களுக்கு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த தீப திருவிழா குறிப்பிடுகிறது. ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர – சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டள்ளார். இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும் கேட்டுக்கொண்டார். நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள்,பட்டாசுகள் பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகை தீபாவளி. தமிழ்நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து அதிமுக நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்நாளில் தனி மனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் என தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

Gayathri Venkatesan

கன மழை – நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Web Editor

நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு

Web Editor