நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அணி ஆலோசனை கூட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில்…

நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அணி ஆலோசனை கூட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள அருள்முருகன் டவர்ஸில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது;

காவேரி பிரச்சனையில் நான் அரசியல் செய்யவிரும்பவில்லை. தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும். அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றியணைந்து செயல்பட வேண்டும். பள்ளிகளில் சாதி மோதல்கள் ஏற்று கொள்ள முடியாது ஒன்று. நாடு சுதரந்திரம் அடைந்து 77 ஆண்டுகளிலும் இது போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்றுகொள்ளத்தக்கல்ல. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று சம்பவங்களுக்கு தமிழகத்தில் உள்ள போதை கலாச்சாரமே முக்கிய காரணம். அதேநேரத்தில் தமிழக அரசு போதை விவாகரத்தில் 2.0., 3.0., 4.0 என போதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மட்டும் கவனம் செல்லுத்தாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெய்வேலி என்.எல்.சி. 3வது அனல்மின் நிலையம்த்தில் 3வது சுரங்க பணிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் மூலம் நன்றாகவே தெரிகிறது. தமிழக அரசு காவேரி டெல்வாவை அழிக்க திட்டமிட்டுள்ளது. இது பாமக, என்.எல்.சி. பிரச்சனை இல்லை. தமிழக மக்களின் பிரச்சனை. நிலக்கரி சுரங்கத்திற்காக 70 ஆயிரம் ஏக்கரை அழிக்க திட்டமிட்டுள்ளனர். நெல் உற்பத்தியில் கடலூர் மாவட்டம் 4 வது இடத்தில் உள்ளது. பயிரை அழித்து நிலக்கரி சுரங்கம் அமைக்கபடலாமா?. இவர்கள் விவசாயிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிரியை போல் செயல்படுகிறார்கள்.

நீட் மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுதிட மாட்டேன் என ஆளுநர் சொல்வது, அவர் சொந்த கருத்தை திணிப்பது போல் உள்ளது. ஆளுநர் நீட் விவகாரத்தில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது மக்களுடைய விருப்பம். தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேவையில்லை என கூறுகிறார்கள். ஆளுநர் சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவராக முடியும் . 7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள்.

நீட் தேர்வுத்தான் முக்கியம் என்றால் எதற்கு 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துகிறீர்கள். நீட் தேர்வை மாட்டு மட்டும் நடத்துங்கள்., நீட் பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் மூட வேண்டும் என கூறினால் ஆளுநர் ஒப்புக் கொள்வாரா?. நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது. அதனால் ஆளுநர் இது போன்ற பேச்சுகளை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.