ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். லாரி ஓட்டுநராக பணியாற்றிய சரவணன், கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பணிக்கு சென்றபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், கணவரை இழந்து வாழும் கோமதி, தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனவும் கோமதி கோரிக்கை விடுத்துள்ளார்.







