மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டில் இருந்து உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 28 சதவிகித அக விலைப்படி உயர்வுடன் 3 சதவிகிதத்தையும் சேர்த்து 31 சதவீதமாக வழங்கப்படும்.
இதன் மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள் ளது.







