எஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அரிவாளால் வெட்டியதாக மணிகண்டன் வாக்குமூலம்

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அவரை அரிவாளால் வெட்டியதாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்…

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அவரை அரிவாளால் வெட்டியதாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில், கல்லணையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலை தொடர்பாக, மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்லணை பகுதியில் திருடிய 3 ஆடுகளுடன், நவல்பட்டு வழியாக, புதுக்கோட்டைக்கு 3 பேரும் சென்றபோது, பூலாங்குடி பகுதியில் பூமிநாதன் தங்களை வழிமறித்ததாக தெரிவித்துள்ளார். நிற்காமல் சென்ற தங்களை விரட்டி வந்து மடக்கிப் பிடித்த பூமிநாதன், தான் வைத்திருந்த அரிவாளை பறித்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

தமது தயாரின் செல்போன் எண்ணை வாங்கி பேசியதாகவும், பின்னர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரை வருமாறு கூறியதாகவும் மணிகண்டன் தெரிவித்தார். பூமிநாதன் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரை கல்லால் தாக்குமாறு சிறுவர்களுக்கு சைகை policeகாட்டியதாகவும், அதன்படி அவர்கள் தாக்கியதும், பூமிநாதனிடமிருந்த அரிவாளை பிடுங்கி, தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக மணிகண்டன் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.