GOLD RATE | குறைந்த தங்கம் விலை……….. இன்றைய நிலவரம் என்ன…..?

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையானது தினந்தோறும் புதுபுது ஆச்சரியங்களை தந்து வருகிறது. வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70-ம் சவரனுக்கு ரூ.560-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,580க்கும் ஒரு சவரன் ரூ.1,16,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியானது விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.