தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து ரூ.65 ஆயிரத்து 680-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

அதனை தொடர்ந்து (2024) நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே டந்த 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 220க்கும், சவரன் ரூ.65 ஆயிரத்து 760-க்கு விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8ஆயிரத்து 210-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 13,000-க்குவிற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.