உ.பி.யில் பல்கலை. வளாகத்தில் தொழுகை – மாணவர் கைது!

உத்தரப்பிரதேசத்தின் தனியார் பல்கலைக்கழகத்தில் 50 மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது
செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளியில், தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வாரம் ஹோலி கொண்டாட்டங்களின் போது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் குழு ஒன்று தொழுகை நடத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனைத்தொடர்ந்து இந்த வீடியோவை பகிர்ந்த காலித் பிரதான் என்ற மாணவர் மற்றும் மூன்று பாதுகாப்புப் பணியாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

தொடர்ந்து கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காலித் பிரதான் கைது செய்யப்பட்டார். பல்கலை வளாகத்தில் மாணவர்கள் அனுமதியின்றி தொழுகை நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவர் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பல்கலைக்கழகத்தின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.