உத்திரமேரூர் அருகே பஞ்சாயத்து கிணறு தூர்வாரும் பணியின் போது 4அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி ஊராட்சி, எம்ஜிஆர் நகர் ஏரிகரையில் பஞ்சாயத்து பொது கிணறு உள்ளது. இந்நிலையில் குடிநீர் தேவைக்காக கிணறு தூர்வாரும் பணிகள் நடந்து வந்துள்ளது. கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது 4அடி உயரமும் 2அடி அகலமும் கொண்ட புதிய அம்மன் சிலையை கண்டுள்ளனர். இதை தொடர்ந்து கிணற்றில் இ்ருந்து அம்மன் சிலையை எடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் குணசேகரன், மற்றும் வருவாய்துறை ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர் அம்மன் சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கிராமத்தினர் யாராவது சிலையை கிணற்றில் வைத்தார்களா அல்லது சிலையை திருடி கொண்டு வந்து கிணற்றில் போட்டார்களா என்று வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-கோ. சிவசங்கரன்.
உத்திரமேரூர் அருகே கிணறு தூர்வாரும்போது அம்மன் சிலை கண்டெடுப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: