#GOAT திரைப்படம் – புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி!

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திரையரங்குகளில் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார். விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT…

#GOAT Movie - Special screening allowed in Puducherry!

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திரையரங்குகளில் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.

விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் (செப். 5) வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இதையும் படியுங்கள் : தெலுங்கு சினிமாவில் 16 ஆண்டுகள்… செப்.5ம் தேதி வெளியாகிறது நடிகர் நானி நடிக்கும் #NANI32 பட அப்டேட்!

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் கடந்த 2-ம் தேதி வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திரையரங்குகளில் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, காலை 9-மணியளவில் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதா? இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.