தெலுங்கு சினிமாவில் 16 ஆண்டுகள்… செப்.5ம் தேதி வெளியாகிறது நடிகர் நானி நடிக்கும் #NANI32 பட அப்டேட்!

நடிகர் நானியின் 32-ஆவது திரைப்படம் குறித்து செப்டம்பர் 5-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகுமென நானி தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய…

#NANI32 film update featuring actor Nani will be released on 5th September!

நடிகர் நானியின் 32-ஆவது திரைப்படம் குறித்து செப்டம்பர் 5-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகுமென நானி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகியது.

நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்த திரைப்படம் 5 நாட்களில் ரூ.75.26 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் நானியின் 32-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி காலை 11.04 மணிக்கு வெளியாகுமென நானி தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் நானியின் கைகளில் ரத்த கறை இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :GOAT திரைப்பட சிறப்புக் காட்சிகளுக்கு கிடைக்குமா அனுமதி?

நானியின் முதல் திரைப்படம் அஷ்ட சம்மா திரைப்படம் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. தெலுங்கு சினிமாவில் 16 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதி நானியின் 32-ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.