ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மேற்காசிய நாடுகளில் போர் நடைபெற்று வருகின்றனது.
இந்த போரால் உயிரிழப்புகளை தாண்டி பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. போர் நடவடிக்கையாக ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதானால் இந்தியா போன்ற நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே போல இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியவசிய அடிப்படையில் கல்வி மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு முதலில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மின்சார அடுப்புகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. இதனையடுத்து பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற ஆன்லைன் செயலிகளில் மின்சார அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால் ஆன்லைன் டெலிவரி தளங்களில் அவுட் ஆப் ஸ்டாக் என்ற அறிவிப்பு வருவதாக வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர்.







